×

அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த ரேஷன் கடை கட்டிடம்: புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை

பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் உள்ள பழுதடைந்த நியாய விலை கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எல்லாபுரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு 280 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் அருகே சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட நியாய விலை கட்டிடம் உள்ளது. இக்கட்டிடம் மிகவும் பழுதடைந்து மேற்கூரை கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து உள்ளே மழை நீர் கசிவதால் கடையில் உள்ள அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மழைநீரில் நனைந்து வீணாகும் அவல நிலை இருந்தது.

இந்நிலையில், நியாய விலை கட்டிடம் இல்லாத காரணத்தினால் அருகே உள்ள இ-சேவை மையம் கட்டிடத்தில் தற்காலிகமாக நியாய விலை கடை இயங்கி வருகிறது. இ-சேவை மையத்தில் நியாய விலை கடை இயங்கி வருவதால் சரிவரை கடை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி குடும்ப அட்டதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `எங்கள் பகுதியில் நியாய விலை கடை பழுதடைந்ததால் பொருட்களை வாங்க மிகவும் சிரமப்படுகிறோம். பழைய கட்டிடம் ஆபத்து விளைவிக்கும் வகையில் இருக்கிறது. கடை எந்த நேரத்திலும் சரிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே பழுதடைந்த பழைய கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித் தர பலமுறை கோரிக்கை வைத்தோம். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே பழைய கட்டிடத்தை அகற்றி புதிய நியாய விலை கட்டிடம் கட்டித் தர வேண்டும்’  என்றனர்.

Tags : Achinchivakkam Panchayat , Dilapidated ration shop building in Achinchivakkam Panchayat: People demand to construct a new one
× RELATED அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில் பழுதடைந்த...