×

ஆவடி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஆவடி: ஆவடி பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் நாசர் மற்றும் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழக அரசின் உத்தரவுப்படி ேநற்று மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 186 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாம்களில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட வர்களுக்கு கார்பிவேக்ஸ் தடுப்பூசியும், 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி முதல் தவணை இரண்டாம் தவணை போடப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 180 நாட்கள் முடிவடைந்தவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி ஆணையர் தர்பகராஜ், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் செந்தில்குமார், மண்டல குழு தலைவர் அமுதா பேபி சேகர், 29வது வார்டு உறுப்பினர் விமல், 10வது வார்டு உறுப்பினர் ஜான் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Corona vaccination ,Aavadi , Corona vaccination camp in Aavadi area
× RELATED ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் இணையதள...