×

விம்பிள்டன் டென்னிஸ் 7வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பிய நட்சத்திரம் நோவாக் ஜோகோவிச் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். பைனலில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் நேற்று மோதிய ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் 3 மணி நேரம் போராடி வென்றார். விம்பிள்டன் தொடரில் 7வது முறையாக கோப்பையை முத்தமிட்டுள்ள அவர், 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலமாக ஸ்பெயினின் ரபேல் நடாலுக்கு (22 பட்டம்) அடுத்து 2வது இடத்தில் ஜோகோவிச் நீடிக்கிறார். சுவிஸ் நட்சத்திரம் பெடரர் (20 பட்டம்) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சாதனை வீரர் ஜோகோவிச்சுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

* புதிய நட்சத்திரம்!
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் சிறுமியர் பிரிவில் அமெரிக்காவின் லிவ் ஹோவ்டே (16 வயது, முதல் ரேங்க்) சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் ஹங்கேரியின் லூகா உட்வார்டியுடன் மோதிய ஹோவ்டே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். விம்பிள்டன் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார் லிவ் ஹோவ்டே.

Tags : Djokovic ,Wimbledon , Djokovic is the 7th Wimbledon tennis champion
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!