பெரியாறு அணை பெயரை சொல்லி நன்கொடை வேட்டை 10 நாளில் ரூ.13,000 மட்டுமே வசூல்; வங்கி கணக்கை குளோஸ் செய்ய கேரள அமைப்பு முடிவு

கூடலூர்:  பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பான வகையில் ஆவணப்படம் எடுத்து விஷமப் பிரசாரம் செய்ய, உலகம் முழுவதும் நன்கொடை கேட்ட ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்புக்கு 10 நாளில் வெறும் ரூ.13 ஆயிரம் மட்டுமே வசூலாகியுள்ளது. இதனால் வங்கி கணக்கை குளோஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். கேரளாவில் ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற அமைப்பு, பெரியாறு அணைக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன், சர்ச்சைக்குரிய வகையில் தொடர்ந்து விஷம பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. வழக்கம்ேபால் இந்த ஆண்டும், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பு பெரியாறு அணைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விஷம பிரசாரத்தை தொடங்கியுள்ளது.

பெரியாறு அணைக்கு எதிராக பிரதமருக்கு அனுப்ப  கேரள மக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெரியாறு அணை குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன் விஷமப்பிரசாரம் செய்யும் நோக்கத்தில் ஆவணப்படம் எடுக்க ரூ.30 லட்சம் பணம் தேவை. நன்ெகாடை தாருங்கள் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு உலகமெங்கும் உள்ள கேரள மக்களிடம் நன்கொடை கேட்டனர். ஆனால், இந்த அமைப்பினரின் விஷம பிரசாரத்தை நம்பாத கேரள மக்கள், நன்கொடை கொடுக்க ஆர்வம் காட்டவில்லை. எனவே 10 நாட்களுக்கு மேலாகியும் இந்த அமைப்பிற்கு நன்கொடை ரூ.13,975 மட்டுமே வசூலாகி உள்ளது. இது பெரியாறு அணை பெயரை சொல்லி வசூல் வேட்டை நடத்தியவர்களுக்கு கிடைத்த பேரடியாகும். இதனால் ‘சேவ் கேரளா பிரிகேட்’ அமைப்பு வசூலுக்கென தொடங்கிய வங்கி கணக்கை குளோஸ் செய்ய முடிவு செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர்.

அவர்களது பதிவில், ‘‘எங்களின் கணக்கில் இதுவரை ரூ.13,975 மட்டுமே வசூலாகி உள்ளது. இதில் ரூ.5,938 கைவசம் உள்ளது, ரூ.8,037 வங்கியில் உள்ளது. ஆவணப்படத்தின் ஸ்கிரிப்ட்டின் சில பகுதிகளை எழுதுவதற்கும், பேஸ்புக் போஸ்டரை வடிவமைக்க பணம் செலுத்துவதற்கும் வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலும், அது அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் நிதி வரலாம் என்பதால், கூடுதலாக ஒரு வாரம் பொறுத்திருக்கலாம் என்பது ரசல் ஜோய் மற்றும் குழு நிர்வாகியின் கருத்து. இல்லை என்றால், இந்தப் பணம் அடுத்த வாரம் திருப்பித் தரப்படும். அதன் பிறகு அந்த கணக்கு குளோஸ் செய்யப்படும்’’ என பதிவிட்டுள்ளனர்.

Related Stories: