தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை; வைத்திலிங்கம் பேட்டி

சென்னை: நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து ெகாண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாங்கள் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மேலும் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் இப்போதும், எப்போதும் ஓ.பி.எஸ்.தான். அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார். ஒன்றரை கோடி தொண்டர்கள் தேர்வு செய்த அந்த பொறுப்பை 2,600 நபர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது. 1.5 கோடி தொண்டர்களும் ஒ.பி.எஸ். பக்கமே இருக்கின்றனர்.

Related Stories: