ஆற்றல்மிக்க படை உருவாகும் அக்னி வீரர்களுக்கு பயிற்சியளிக்க குழு; விமானப்படை தளபதி அறிவிப்பு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் மூலம் வலுவான, ஆற்றல்மிக்க விமானப்படை உருவாகும் என்று விமானப்படை தளபதி சவுதாரி தெரிவித்தார். நாட்டின் முப்படைகளில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபாதை திட்டம் கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும். இதன் முதல் கட்டமாக, இத்திட்டத்தின் கீழ் விமானப்படையில் இளைஞர்கள் சேர கடந்த 24ம் தேதி இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியது.

இதில் 7.56 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இது பற்றி விமானப்படை தளபதி சவுதாரி நேற்று அளித்த பேட்டியில், `விமானப்படையை வலுவானதாக, ஆற்றல் மிக்கதாக உருவாக்க வேண்டும் என்ற விமானப்படையின் நீண்ட நாள் தொலைநோக்கு பார்வை அக்னிபாதை திட்டத்தின் கீழ் மூலம் நிறைவேற உள்ளது. தற்போதைய இளைஞர்களிடம் தொழில்நுட்பத்துடன் கூடிய பல்வேறு திறமைகள் உள்ளன. இவர்கள் அக்னி வீரர்கள் ஆவதற்கான பயிற்சியை வழங்க, விமானப்படையில் 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,’ என்று தெரிவித்தார்.

Related Stories: