தமிழகத்திலிருந்து 1672 பேர் ஹஜ் பயணம்; இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் தகவல்

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 1672 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டிருப்பதாக இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் தெரிவித்துள்ளார். இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு உலகம் முழுவதும் இருந்து 8 லட்சத்து 99 ஆயிரத்து 353 பேர் ஹஜ் பயணம் செய்துள்ளதாக புள்ளிவிபரங்களுக்கான சவுதி பொது ஆணையம் தகவல் அளித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் சுமார் 21 சதவீதம் பேர் அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலிருந்து 58 சதவீதம் பேர் ஹஜ் வந்துள்ளது தெரியவந்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் சுமார் 7 லட்சத்து 39 ஆயிரம் பேர் விமானம் மூலமாகவும் 35 ஆயிரத்து 210 பேர் கடல் மார்க்கமாகவும் பயணம் செய்துள்ளனர். தமிழகத்தை பொருத்தமட்டில் 1672 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில் 860பேர் ஆண்கள் 812பேர் பெண்கள் ஆவர். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: