இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்பு: பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி

இஸ்லாமாபாத்: இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் அப்ரிடி தெரிவித்துள்ளார்.   

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற 2-வது  டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். இந்திய அணி  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது எனவும் இங்கிலாந்து அணிக்கு தொடரை இந்திய அணி மிகவும் தகுதியானவர்கள் எனவும் கூறினார்.

மேலும் இந்திய அணி சிறப்பான பந்துவீச்சை கொண்டுள்ளது எனவும் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல வாய்ப்புள்ளது எனவும் அப்ரிடி கூறியுள்ளார்.

Related Stories: