இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

டெல்லி: இலங்கையில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இதுவரை 3.8 பில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இலங்கையும் அதன் மக்களும் எதிர்கொள்ளும் பல சவால்களை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிகிறது. இந்த கடினமான காலகட்டத்தை கடக்க முயற்சிக்கும் இலங்கை மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: