ஜெயிலில் சக கைதிகளால் தாக்குதல்: பஞ்சாப் பாடகர் கொலை: குற்றவாளியின் மண்டை உடைப்பு

லூதியானா: பாடகர் கொலை வழக்கில் தொடர்புடைய சிறை கைதியை, சக கைதிகள் சரமாரியாக அடித்து தாக்கியதால் அவனின் மண்டை உடைந்தது. தற்போது அவனுக்கு லூதியானாவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் கடந்த மே 29ம் தேதி பிரபல பாடகர்  சித்து மூசே வாலா மர்ம கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில்  இதுவரை 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். சிறையில்  அடைக்கப்பட்டுள்ள தாதா லாரன்ஸ்-கோல்டி பரத் கும்பலைச் சேர்ந்த  குற்றவாளிகளான அங்கித் சிர்சா (19), சச்சின் பிவானி (23) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர். ஏற்கனவே கடந்த மாதம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் லூதியானா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சக கைதிகளால் பாடகர் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குர்பிரீத் சிங் கூறுகையில், ‘கைது செய்யப்பட்டவர்களில் சத்பீர் என்பனை லூதியானா சிறையில் அடைத்தோம். அவனை சக கைதிகள் சரிமாரியாக தாக்கியுள்ளனர். அவனது மண்டை உடைந்துவிட்டது. அதனால், மருத்துவமனைக்கு அழைத்து வந்தோம். அவனது தலையில் தையல் போடப்பட்டுள்ளது. மீண்டும் அவன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்’ என்று தெரிவித்தார்.

Related Stories: