ரஷித்கானை விட சஹால் தான் நம்பர் 1 சுழற்பந்து வீச்சாளர்: இங்கிலாந்து மாஜி வீரர் பாராட்டு

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின்அணியின் முன்னாள் நட்சத்திர சூழல் பந்துவீச்சாளர் கிரீம் ஸ்வான் அளித்துள்ள பேட்டி:  “சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் சஹால்தான். அதை நான் சொல்லிக் கொண்டே இருப்பேன். குறிப்பாக டி20 போட்டியில் அவர் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார். ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை மைதானத்தில் அவருடைய விளையாட்டை இரண்டு முறை பார்த்துள்ளேன்.

அவர் விளையாடுவதை அருகில் சென்று பார்க்கும் பொழுது நான் அப்படியே உறைந்து போய் விட்டேன். அவருடைய லென்த் மிகவும் கச்சிதமாக இருந்தது. அதனால் இங்கு பெரிய மைதானத்தில் அவருடைய சிறப்பான பந்துவீச்சு எனக்கு அந்த அளவிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தவில்லை. விக்கெட் எடுத்தாலும் அல்லது அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டாலும் அவர் மிகவும் கட்டுப்பாட்டுடனும், சிறந்த லென்த்திலும் பந்துவீசுவார்’’ என்றார்.

Related Stories: