கர்நாடகா கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு 21,600 கன அடியில் இருந்து 32,500 கன அடியாக உயர்வு: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்க தடை

கர்நாடகா: கர்நாடகா கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து நீர் திறப்பு 21,600 கன அடியில் இருந்து 32,500 கன அடியாக உயர்தப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து வினாடிக்கு 7,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரப்பி வருகின்றது. முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் இரு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

Related Stories: