×

ஆனி பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு; சதுரகிரிக்கு செல்ல 4 நாள் அனுமதி

வத்திராயிருப்பு: ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு ஆனி மாத பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு, நாளை முதல் 14ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 காலை 7 மணி முதல் 12 மணி வரை அனுமதிக்கப்படுவர். நாளை பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடக்கும். வரும் 13ம் தேதி ஆனி பவுர்ணமி வழிபாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்கிற பெரியசாமி, செயல் அலுவலர் மாரிமுத்து ஆகியோர் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் முக்கக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அனுமதியில்லை. இரவில் தங்க, ஓடைகளில் குளிப்பதற்கு அனுமதியில்லை. பாலீத்தீன் பைகள் கொண்டு வரக்கூடாது என கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Aani ,Prathosham ,Pournami ,Chaturagiri , Ani Pradosham, before the full moon; 4 day permit to visit Chaturagiri
× RELATED விசாகம், பவுர்ணமி, விடுமுறை தினத்தால்...