×

பேரையூரில் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடையும் பெரியகுளம் கண்மாய்: பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பேரையூர்: பேரையூரில் உள்ள பெரியகுளம் கண்மாயில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுவதால், நீர்நிலை மாசடைந்து வருகிறது. இதை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பேரையூரில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. இதன் மூலம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இந்நிலையில், கண்மாயின் கரையோரம் இருபுறமும் பிளாஸ்டிக் மற்றும் கேரிபைகளின் கழிவுகளை கொட்டுகின்றனர். இவைகள் மலைபோல தேங்கிக் கிடக்கிறது. பேரையூர் மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து வரும் கழிவுநீர், குப்பைக் கழிவுகள் நீர்வரத்து ஓடைகள் மூலம் பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேருகின்றன. கண்மாயிலிருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்போது பிளாஸ்டிக் கழிவுகளும் செல்கின்றன.

இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. பேரையூரிலிருந்து சாலிச்சந்தை, காடனேரி செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும், கண்மாய் கரைகளின் ஓரங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. எனவே, பெரியகுளம் கண்மாய் மற்றும் சாலையோரங்களில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Periyakulam ,Beirayur , Periyaur, Plastic waste, Masadaiyum Periyakulam Kanmai, Municipality,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்