×

திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் பனகல் அரசர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் பனகல் அரசர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர், தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தை தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதல்வர் பனகல் அரசரின் பிறந்தநாள் இன்று. சமூகநீதிக்கு அடித்தளமிட்ட வகுப்புவாத பிரதிநிதித்துவத்திற்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையை காக்கின்ற வகையில் இந்து அறநிலைய சட்டத்தை நிறைவேற்றியவர்.ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளை பிறப்பித்தவர். பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்க செய்தவர்.

உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். மருத்துவ கல்வி-வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்க தடையாக இருந்தவற்றை தகர்த்தெறிந்தவர்.‘பனகல் அரசர்’ குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது. மக்களாட்சியின் காவலராக செயற்கரிய செய்த பனகல் அரசரின் செயல்களை போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம்.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.



Tags : King of ,Chief Minister ,M. K. Stalin , King of Panagal inaugurated the first chapter of the Dravidian model: greetings from Chief Minister M. K. Stalin
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...