சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான துணை நடிகையின் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.இதையடுத்து, மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.