×

சத்தி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்து பசியாறிய காட்டு யானை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை, கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து தின்று, நின்று நிதானமாக பசியாறியதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி நேற்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கரும்பு லாரியை வழிமறித்ததால் டிரைவர் பிரேக் போட்டு நிறுத்தினார்.

உடனே லாரியின் அருகே வந்த காட்டு யானை, தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை பறித்து சுவைத்தபடி வெகு நேரம் அங்கேயே நின்றிருந்தது. வரிசையில் நின்றிருந்த டிரைவர்கள், ‘‘விநாயகா வழிவிடு, விநாயகா வழிவிடு’’ என யானையை பக்தியுடன் கும்பிட்டபடி கூறினர்.  சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றது. இதனால், வாகன போக்குவரத்து அரைமணி நேரம் பாதித்து வாகன ஓட்டிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது.  



Tags : Satti , On National Highway near Satti Bypassing the sugarcane truck A hungry wild elephant
× RELATED முதல்வர் பிறந்த நாள் விழா 4 கிலோ கஞ்சாவுடன் அசாம் வாலிபர் கைது