×

ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதியில் 12ம் தேதி விஐபி தரிசனம் ரத்து

திருமலை: திருமலை ஏழுமலையான் கோயிலில் நாளை மறுதினம்  விஐபி  தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை- திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சம்பிரதாய முறைப்படி வருடாந்திர கணக்கு தொடங்கப்படும் ஆனிவார ஆஸ்தானம் 17ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நாளை மறுதினம் கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் வகையில் ஆழ்வார் திருமஞ்சனம்  நடைபெற உள்ளது.

அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. இதனால்  சிறப்பு பூஜை செய்யப்பட்டு 11 மணிக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படும். எனவே 5 மணி நேர இடைவெளியில் எந்த பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. அதனால், 12ம் தேதி விஐபி தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. 11-ம் தேதி விஐபி தரிசனத்திற்கு எந்தவித பரிந்துரை கடிதங்களும் ஏற்கப்படாது.  



Tags : Alvar Thirumanjanam Tirupati , Alwar Thirumanjanam 12th at Tirupati VIP darshan is cancelled
× RELATED ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி...