2வது டி20யிலும் இங்கிலாந்து தோல்வி தொடரை கைப்பற்றியது இந்தியா

பர்மிங்காம்: இங்கிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 50 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச... இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் 31 ரன், பன்ட் 26 ரன் எடுக்க, கோஹ்லி 1 ரன்னில் வெளியேறினார். சூரியகுமார் 15, ஹர்திக் 12, கார்த்திக் 12, ஹர்ஷல் 13, புவனேஷ்வர் 2 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

ஜடேஜா 46 ரன், பும்ரா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜார்டன் 4, அறிமுக வேகம் கிளீசன் 3 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 19.3 ஓவரில்  அனைத்து விக்கெட்டையும் இழந்து 148 ரன் எடுத்து தோற்றது. மொயின் அலி அதிகபட்சமாக 36 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில்  ஹர்திக் பண்டியா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி போட்டி நடைபெறுகிறது.

Related Stories: