×

ரைபாகினா சாம்பியன்

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், கஜகஸ்தான் வீராங்கனை எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபருடன் (27 வயது, 2வது ரேங்க்) நேற்று மோதிய ரைபாகினா (23 வயது, 23வது ரேங்க்) 3-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை முத்தமிட்டார். இப்போட்டி 1 மணி, 48 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. கிராண்ட் ஸ்லாம்தொடரில் பட்டம் வென்ற முதல் கஜகஸ்தான் வீராங்கனை என்ற பெருமை ரைபாகினாவுக்கு கிடைத்துள்ளது.



Tags : Rybakina , Rybakina
× RELATED 4வது சுற்றில் ரைபாகினா