×

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாக்கம் ஒன்றிய குழு இடைத்தேர்தலில் மோதல்!: பாமக மாவட்ட செயலாளரை கைது செய்ய கோரிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் 13வது ஒன்றிய குழு இடைத்தேர்தலில் திமுகவினர் மீது பாமகவினர் தாக்குதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாக்கம் 13வது ஒன்றிய குழு இடைத்தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேல்சிலாவட்டம் கிராமத்தை சேர்ந்த கோபி, கார்த்திக் ஆகிய இருவர் மீது பாமகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆகவே பாமக செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் கணபதியை கைது செய்யக்கோரி மேல்சிலாவட்டம் 7வது வார்டு கிராம மக்கள் இடைத்தேர்தலை புறக்கணித்தனர்.

இதனிடையே சீர்காழி அருகே கொள்ளிடத்தில் பார்வையற்ற ஒருவருக்கு வாக்குப்பதிவு செய்ய வாக்குச்சாவடி அலுவலர் உதவினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் வாக்குப்பதிவு மையத்தில் உள்ளே நுழைந்து அதிகாரிகளை மிரட்டி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை அருகே கடந்த 15 ஆண்டுகாலமாக முறையாக சாலை வசதி இல்லாததால் 7வது வார்டு மாவட்ட உறுப்பினர் குழு தேர்தலை பனவயல், பராவயல், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட 3 கிராம மக்களும், பெரிய தம்பிஉடையான்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்காப்பட்டி கிராம மக்களும் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 80 வயதான இந்திராணி என்ற மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலி இடங்களுக்கு தற்செயல் தேர்தல்களை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவித்தது. அதன்படி 498 ஊரக உள்ளாட்சி பதவி இடங்களுக்கும், 12 நகர்ப்புற உள்ளாட்சி பதவி இடங்களுக்கும் என மொத்தம் 510 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 1022 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

Tags : Bakkam ,Union Group ,Chengalbatu District ,Madurandakam , Chengalpattu, Madurandakam, Pakam Union Committee by-election, clash
× RELATED செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம்...