×

ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பாலியல் புகார் தாளாளர், பள்ளி முதல்வர் வாக்குமூலம்

சென்னை: சென்னை கே.கே.நகர், பத்மாசேஷாத்திரி பள்ளி மீது பாலியல் புகார்கள் எழுந்தது. மேலும் சிவசங்கர்பாபா நடத்திய சுசில்ஹரி பள்ளி மீதும் புகார்கள் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக சென்னை அமைந்தகரை-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதுகுறித்துநேரில் ஆஜராக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பாலியல் குற்றசாட்டுக்கு ஆளான பள்ளியின் தாளாளர் ஜார்ஜ், ஆசிரியர் ஏ.பி.தாஸ் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கும்மாறு சம்மன் அனுப்பியிருந்தார். அதன்படி நேற்று பள்ளி தாளாளர் ஜார்ஜ், ஆசிரியர் எபிதாஸ், பள்ளி முதல்வர் மார்க் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சுமார் 6 மணிநேரம் விசாரணை நடந்தது. இதைபோல் புகார்தாரரின் சார்பில் வழகறிஞர் தர் ஆஜராகி விளக்கம் அளித்தார். புகார்தாரார் மற்றும் எதிர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விளக்கங்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டது. விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்….

The post ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் பாலியல் புகார் தாளாளர், பள்ளி முதல்வர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Anglo Indian School ,Chennai ,Padmaseshatri School ,KK Nagar ,Susilhari School ,Shiva Sankar Baba ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?