×

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து கடலில் குளித்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்து கடலில் குளித்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா தலமான வேளாங்கண்ணி கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் செய்துவைத்திருந்தாலும், கடலில் குளிக்க ஆர்வத்துடன் இருக்க கூடியவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவம் வாடியாகியுள்ளது.

இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்டத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்திருந்த 2 சிறுமிகள் உட்பட 3 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான வேளாங்கண்ணி கடற்கரைக்கு ஏராளமானோர் வந்துசெல்கின்றார். அதன்படி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜ்கம்பிரம் பகுதியில் இருந்து 15 பேர் கொண்ட குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர்.

பேராலயத்திற்கு சொந்தமான விடுதியில் தங்கியிருந்த அவர்கள் காலை 8 மணியளவில் கடற்கரையில் குளிப்பதற்கா வந்துள்ளனர். காலை 8 மணி முதல் 11 மணிவரை கடலில் தொடர்ச்சியாக குளித்து வந்துள்ளனர். அப்போது ஆரோக்கிய செரின்(19), தியான(13), சஹானா(14) கடல் அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதனை பார்த்த அங்குள்ள பொதுமக்கள் 3 பேரையும் போலீசார் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இருந்தபோதிலும்  கடலின் ஆழமான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என காவல்துறை, தீயணைப்புத்துறையினர் வைத்துள்ள எச்சரிக்கை பலகைகளை முழுமையாக சுற்றுலாப்பயணிகள் பின்பற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.


Tags : Velankanni, Tourism, Girls, Casualty
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!