×

சீசன் நேரத்தில் சிறுமலை பலாவுக்கு விலை இல்லை-மலை விவசாயிகள் கவலை

திண்டுக்கல் : வரத்து அதிகரிப்பால சிறுமலை பலாப்பழத்துக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திண்டுக்கல் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுமலையில் சுமார் 400 ஏக்கர் பரபளவில் பலாத் தோப்புகள் உள்ளன. இங்கு விளையும் பலாப்பழங்களை தினசரி திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சிறுமலை செட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இங்கிருந்து மதுரை, திருச்சி, பரமத்திவேலூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களுக்கு விற்பனைக்காக சிறுமலை பலாப்பழம் அனுப்பி வைக்கப்படுகிறது. சராசரியாக தரத்திற்கு ஏற்ப ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படும். சீசன் இல்லாத சமயத்தில் ரூ.500 முதல் ரூ.700 வரை பழங்கள் விற்கப்படும். தற்பொழுது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளதால் பழத்தின் வரத்து அதிகரித்தால் நேற்று மட்டும் 2000 பலாப்பழங்கள் வந்துள்ளன.  இதனால், 50 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால் மலை விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Tags : Dindigul: Farmers are worried about not getting enough price for Sirumalai Jackfruit due to increase in supply.
× RELATED வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக...