×

கர்நாடகவில் கனமழை: கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கே.ஆர்.எஸ். அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வினாடிக்கு 10,000 முதல் 25,000 வரை நீர் வெளியேற்றப்பட இருப்பதால் காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மிக தீவிரமடைந்துள்ளது.

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சிக்மங்களூர், ஹசன், மைசூர், மண்டியா, ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையானது பதிவாகிவருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள முக்கிய அணைகளான கே.ஆர்.எஸ்.மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணைக்கு 34,000 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து 3,200 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ். அணையில் தற்போது 121.42 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. அணை முழுகொள்ளளவை எட்ட மேலும் 3அடிகள் மட்டுமே நீர் நிரம்ப வேண்டியுள்ளது. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், அணையில் இருந்து அதிகப்படியான நீர் எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி கையோரம் தாழ்வான பகுதியில் உள்ள கிராம மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Karnataka ,KRS ,Cauvery , Heavy rains in Karnataka, KRS Dam, Cauvery coastal people, flood warning
× RELATED கர்நாடக மாநிலம் பன்னர்கட்டா தேசிய...