×

அரசு கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு: சிபிஎஸ்இ தேர்வு முடிவுக்கு பிறகும் விண்ணப்பிக்கலாம்

சென்னை: அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, மேலும் சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுக்கு பிறகும் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்விதுறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது: கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிஇ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் இது வரை வெளியாகவில்லை.

 சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு 5 நாட்கள் வரை அவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இந்த மாணவர்கள் 5 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அந்த நாட்களுக்குள் சி.பி.எஸ்.இ.-ல் படித்தவர்கள் மட்டுமல்லாது, மற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த காலஅவகாசம் அரசு, தனியார் கல்லூரிகள் என அனைவருக்கும் பொருந்தும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருக்கும் இடங்களை விட அதிகளவில் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இன்ஜினியரிங் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட உள்ளது. முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆப்லைனில் தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி முடிவு குறைவாகி இருக்கிறது. அடுத்து வரும் செமஸ்டர்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுவிடுவார்கள் என்றார்.

Tags : CBSE , Govt Arts, Science, Engineering College Admission, CBSE Exam
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...