×

சென்னை முதல் மண்டபம் வரை 3 பாய்மர படகுகளில் 21 காவலர்கள் 500 கடல் மைல் பயணம்: டிஜிபி சைலேந்திரபாபு இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: தமிழக பாதுகாப்பு குழுமம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்புடன் இணைந்து ‘மரைன் போலீஸ் பாய்மரப் படகு பயணம்-2022’ நடத்த உள்ளது. இந்த பயணத்தில் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த 21 காவலர்கள் 3 பாய்மர படகுகள் மூலம் பயணம் செய்கிறார்கள். உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்டுகளில் இடம்பெறும் வகையில் நடத்தப்படுகிறது.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் இன்று சென்னையில் இருந்து மண்டபம் வரை அதாவது 500 கடல் மைல் தூரத்தை பாய்மர படகு பயணம் மூலம் கடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் தமிழக கிழக்கு கடலோர பகுதியில் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்தவும்,  மீனவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கமாக நடத்தப்படுகிறது.

இந்த பாய்மர பயணத்தை தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திர பாபு இன்று காலை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்தியம் தலைவர் படோலா, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் அபூர்வா, கடலோர பாதுகாப்பு குழுமம்  கூடுதல் டிஜிபி சந்தீப் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Tags : Chennai ,Mandapam ,DGP ,Sailendrababu , Chennai First Mandapam, DGP Sailendrababu,
× RELATED சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள...