×

சிறுகாவேரிப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ18.79 லட்சத்தில் வகுப்பறை: எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டினார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறுகாவேரிப்பாக்கம் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணியினை எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆரியப்பெரும்பாக்கம் கிராமத்தில்ரூ17.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் கலந்துகொண்டு புதிய வகுப்பறையை திறந்து வைத்து மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினர். இதைத்தொடர்ந்து, சிறுகாவேரிப்பாக்கம் கிராமத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்துரூ18.79 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ எழிலரசன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மலர்கொடி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் நித்யா, ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் மேனகா, பி.எம்.நீலகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags : MLA ,Adelarasan , Sirukaveripakkam Govt Middle School classroom at Rs 18.79 lakh: MLA Ehilarasan lays foundation stone
× RELATED டிடிவி, ஓபிஎஸ் டெபாசிட் வாங்குவதே பெரிய விஷயம்: அதிமுக எம்எல்ஏ பளீர்