ஆவடி சி.ஆர்.பி.எப் வளாகத்தில் மியாவாக்கி காடுகள் வளர்ப்பு திட்டம்: கலெக்டர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி சி.ஆர்.பி.எப் வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலியுறுத்தியும் பசுமை வளாகம் எனும் முயற்சியில் அடர் வனம் எனும் மியாவாக்கி காடுகள் அமைக்கும் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதேபோல் இங்கு நாட்டும் மரங்களின் வகைகள் அரசு மரம், எலுமிச்சை மரம், வேப்பமரம், சில்வர்ஒக்கா மரம், நாவல் இலுப்பை என 52 வகை மரங்களை மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி மைதானம் சுற்றி சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில், 7500 மரக்கன்றுகள் மரங்கள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை துணை இயக்குனர் தினகரன் ஆகியோர் கலந்துகொண்டு துவக்கி வைத்தனர். இதில் மத்திய ரிசர்வ் காவல் படை பயிற்சி டிஐஜி கேவல் சிங், முதன்மை சிறப்பு மருத்துவ அதிகாரி ஜெயபாலன், நந்தவனம் பிரீத்தா சீனிவாசன், மிக்கி ஜோசப், சுனில் அகர்வால், சொக்கலிங்கம் மற்றும் 97வது கமெண்ட் அண்ட் ஏரிக் கில்பட் ஜோஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: