தோளூர்பட்டி பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

தொட்டியம்: தொட்டியம் அடுத்த தோளூர்பட்டியில் 200 வருடங்களுக்கு பின்னர் தாழைமடலாயி பிடாரி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் தொட்டிம் அடுத்த தோளூர்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்கு கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் ஏதே காரணத்திற்காக திருவிழா தடைபட்டது. இதையடுத்து திருவிழா கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் அக்கோயில் குடிபாட்டுக்காரர்கள் ஒன்றுகூடி இந்தாண்டு திருவிழா நடத்த முடிவு செய்து விழா கோலாகலமாக துவங்கியது. விழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல், தேர் அலங்காரம் சுவாமி அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருத்தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளினார்.

தோளூர்பட்டி, உப்பாத்து பள்ளம், முதலிப்பட்டி, இலந்தமடை புதூர், கீழ கார்த்திகை பட்டி மேல கார்த்திகை பட்டி பாலசமுத்திரம் அண்ணா நகர் கணேசபுரம் உள்ளிட்ட 9 ஊர்களுக்கு சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு திரு தேரை பக்தர்கள் தலையிலும் தோளிலும் சுமந்து சென்றனர். பக்தர்கள் பிடாரி அம்மனுக்கு தேங்காய் பழம் படைத்து வழிபட்டனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: