அம்மாபேட்டையில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டம்

தஞ்சாவூர்: தமிழக முதல்வர் தூர் வாரும் பணியை ஆய்வு செய்த அம்மாபேட்டை பகுதியிலேயே தூர்வாரும் பணி முழுமையாக நடைபெறாமல் உள்ளது; உடன் தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தஞ்சை நாகை செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய விலை நிலங்கள் பாதிக்கும் அவலம் இதேபோல் புத்தூர், அவில்தார்சத்திரம் புத்தூர் நடுப்பட்டி ,ஆகிய பகுதிகளிலும் உள்ளகிளை வாய்க்கால்கள் பாசன வாய்க்கால்கள் வடிகாள் வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் உள்ளது.

உடன் தூர்வாரக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தூர்ந்து போன அடர்ந்த புதர் மண்டிய வடிகால் வாய்க்காலில் இறங்கி நூதான போராட்டம் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது, இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டு வாய்க்காலில் இறங்கி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: