மகளிர் உலக கோப்பை ஹாக்கி: நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி

ஆம்ஸ்டெல்வீன்: 15வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி  நெதர்லாந்து மற்றும் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. `பி’ பிரிவில் இடம் பிடித்த இந்தியா முதல் போட்டியில் இங்கிலாந்திடம் 1-1, 2வது போட்டியில் சீனாவிடம் 1-1 என டிரா கண்டது. கால் இறுதிக்கு வெற்றிபெற கட்டாய வெற்றி நெருக்கடியில் நேற்று கடைசி போட்டியில் நியூசிலாந்துடன் மோதியது. இதில் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.

இதனால் பி பிரிவில் முதல் இடம்பிடித்த நியூசிலாந்து கால்இறுதிக்குள் நுழைந்தது. இதேபோல் மற்ற 3 பிரிவிலும் முதல் இடம் பிடித்த அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெற்றன. அதே நேரத்தில் 2வது மற்றும் 3வது இடம்பிடித்த அணிகள் கிராஸ் ஓவர் சுற்றில் மோதுகிறது. இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்கு தகுதிபெறும். பி பிரிவில் 3வது இடம் பிடித்த இந்தியா வரும் 10ம்தேதி ஸ்பெயினுடன் மோதுகிறது. இதில் வெற்றி பெற்றால் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதும்.

Related Stories: