ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்; கட்டுப்பாட்டை இழந்த கான்கிரீட் மிக்சர் லாரி அடுத்தடுத்து இரண்டு கார்கள் மோதி விபத்து: குழந்தை உட்பட 3 பேர் பலி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வண்டலூர் ஒரகடம் சாலையில் வஞ்சிவாஞ்சேரி அருகே ஒரகடத்தில் இருந்து வண்டலூரை நோக்கி சென்று கொண்டிருந்த கான்கிரீட் மிக்ஸர் லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து வண்டலூர் ஒரகடம் செல்லும் சாலையின் குறுக்கே புகுந்த பொழுது ஒரகடத்தை நோக்கி எதிரே வந்த இரண்டு கார்கள் அடுத்தடுத்து மோதியதில் மாருதி சுசுகி ஸ்விப்ட் டிசையர் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் வந்த இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து டொயோட்டோ எத்தியோஸ் கார் முன்பக்கம் நொறுங்கியது.

இதில் வந்த இரண்டு ஆண்கள் இரண்டு பெண்கள் மூன்று குழந்தைகள் உட்பட ஏழு பேரில் ஒரு குழந்தை மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. மற்ற அனைவரும் பலத்த காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் சிக்கி தவித்தவர்களை அரை மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி மக்கள் போராடி மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மணிமங்கலம் காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி சென்ற கான்கிரீட் மிக்ஸர் லாரியின் ஓட்டுனரை தேடி வருகின்றனர். மேலும் இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: