வங்கதேசத்திற்கு எதிரான 3வது டி.20; 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி: 2-0 என தொடரை கைப்பற்றியது

பிராவிடன்ஸ்: வெஸ்ட்இண்டீஸ்-வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையே 3வது மற்றும் கடைசி டி.20 போட்டி நேற்றுஇரவு அமெரிக்காவின் பிராவிடன்ஸ் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அபிஃப் ஹொசைன் 50 (38 பந்து), லிட்டன்தாஸ் 49, கேப்டன் மகமதுல்லா 22ரன் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் கைல் மேயர்ஸ் 55 (38 பந்து), பிராண்டன் கிங் 7, புரூக்ஸ் 12, ஓடியன் ஸ்மித் 2, பாவல் 5 ரன்னில் வெளியேற கேப்டன் நிக்கோலஸ் பூரன் ஆட்டம் இழக்காமல் 39 பந்தில் 5 பவுண்டரி,

5 சிக்சருடன் 74 ரன் விளாசினார். 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ரன் எடுத்த வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பூரன் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது பெற்றார். முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் வென்றிருந்த வெ.இண்டீஸ் 2-0 என தொடரை கைப்பற்றியது. அடுத்ததாக இரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகின்றன. இதில் முதல் போட்டி வரும் 10ம் தேதி நடக்கிறது.

Related Stories: