×

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்டரில் இரங்கல் தெரிவித்தார். ஷின்சோ அபே மறைவு சொல்லமுடியாத வருத்தத்தை கொடுத்திருக்கிறது. ஒரு உலகளாவிய அரசியல்வாதி, நல்ல தலைவர், நல்ல நிர்வாகி என ஷின்சோ அபேவுக்கு புகழாரம் சூட்டினார். ஷின்சோ அபேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் நாளை ஒருநாள் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்படும் என கூறிய பிரதமர் மோடி, ஷின்சோ அபேவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், ஜப்பான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.     


Tags : Shinzo Abe ,PM Modi , Japan, Former Prime Minister, Shinzo Abe, Death, Prime Minister Modi, Condolences
× RELATED பாஜவுடன் இணைந்து பணியாற்ற சந்திரசேகர...