×

தேர்தல் பிரசார உரையின் போது..ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

டோக்கியோ : ஜப்பானில் தேர்தல் பிரசார உரையில் பங்கேற்ற அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது கடற்படை வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜப்பான் நாட்டின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷின்சோ அபே (67), இந்திய நேரப்படி இன்று காலை 8.29 மணியளவில், ஜப்பானின் மேற்கு நகரமான நாராவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, திடீரென அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டிய நிலையில் கீழே சரிந்து விழுந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்திருப்பதாகவும், அவரை கொலை செய்யும் எண்ணத்தோடு தான் இந்த சம்பவம்  நடந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சுயநினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திடீர் மாரடைப்பால் இறந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதேநேரம் கூட்டம் நடந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு போன்ற சத்தம் கேட்டதால், சந்தேகத்திற்குரிய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்தியில், ‘ஜப்பானில் மேல்சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக நாரா நகரில் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரசாரம் செய்ய வந்திருந்தார். மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, திடீரென அவரது பின்னால் இருந்து மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிகிறது. அந்த துப்பாக்கி குண்டு அவரது நெஞ்சுப் பகுதியில் பாய்ந்ததால், அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த  2012ம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை ஜப்பானின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ  அபே, மொத்தமாக இதுவரை 4 முறை ஜப்பான் பிரதமராக இருந்துள்ளார். இருந்தும் உடல்நிலை காரணமாக  தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். கடந்த காலங்களில் 2006, 2014, 2015, 2017ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு வந்துள்ளார். பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

Tags : Former ,Shinzo Abe , Election, Japan, Prime Minister, Shinzo Abe
× RELATED சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக...