விம்பிள்டன் டென்னிஸ்: காயத்தால் நடால் விலகல்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் இன்று மாலை அரையிறுதி போட்டியில், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோசுடன் மோத இருந்தார்.

இதனிடையே வயிற்றுபகுதியில் காயம் காரணமாக விம்பிள்டன் தொடரில் இருந்து நடால் விலகி உள்ளார். இதனால் நிக், பைனலுக்கு தகுதி பெற்றார். மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்-பிரிட்டனின் கேம்ரன் நோரி மோதுகின்றனர்.

Related Stories: