11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க பஞ்சாப்பிலிருந்து வந்திறங்கிய சைக்கிள் உதிரி பாகங்கள்

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டியில் கொரோனாவுக்குப் பிறகு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கான பஞ்சாப் மாநிலத்திலிருந்து சைக்கிள் உதிரி பாகங்கள் வந்திறங்கியது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் லாரிகளில் சைக்கிள்கள் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படுகிறது.

இங்கிருந்து மேல்நிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் பதினோறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் பள்ளிகள் முழுமையாக நடைபெறவில்லை என்பதால் இலவச சைக்கிள் வழங்கப்படவில்லை. இந்தாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்கு இலவச சைக்கிள் வழங்க பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இருந்து லாரிகளில் சைக்கிள் கொண்டு வரப்பட்டு புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது. இங்கு சைக்கிள் பிட்டிங் செய்து பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக வைக்கப்படும் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியின்போது சைக்கிள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும்.

Related Stories: