×

எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன்: பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே தாக்கப்பட்டது மனவருத்தம் அளிக்கிறது என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமரும், ஜப்பானின் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் ஷின்சோ அபே அவர்.  

இவர் இன்று காலை மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் கட்சி கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென கீழே விழுந்தார். உடனே அவரது பாதுகாவலர்கள் அவரிடம் சென்று பார்க்கும் போது துப்பாக்கியால் சுடப்பட்டது போன்று ரத்தக்காயங்கள் இருந்துள்ளது.

உடனே அவரது பாதுகாவலர்கள்  ஷின்சோ அபே மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர் கீழே விழுந்ததால் அவருக்கு காயம் ஏற்பட்டத இல்லை சுப்பாக்கியால் சுடப்பட்டர என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்திற்கு பல நாட்டு தலைவர்கள் அவர்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன என அவர் பதிவிட்டுள்ளார்.


Tags : Shinzo Abe ,PM Modi , Deeply saddened by the attack on my dear friend Shinzo Abe: PM Modi Tweet
× RELATED சொல்லிட்டாங்க…