×

முடிந்தால் போர்க்களத்தில் ரஷ்யாவை வென்று காட்டுங்கள் :அமெரிக்க நேச நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் சவால்!!

மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா இன்னும் முழு அளவில் போர் தொடுக்கவில்லை என்று கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், முடிந்தால் போர்க்களத்தில் ரஷ்யாவை வென்று காட்டுங்கள் என்று மேற்கு உலக நாடுகளுக்கு சவால் விடுத்துள்ளார். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடையே பேசிய புதின், போர் நீண்ட காலம் நீடிக்கும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் குறைந்தே இருக்கும் என்றார். உக்ரைனில் ரஷ்யா இன்னும் தீவிரமான போரை தொடங்கவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று கூறிய அவர், அதே நேரத்தில் பேச்சுவார்த்தைகளுக்கு ரஷ்யா தயாராகவே இருப்பதாக குறிப்பிட்டார்.

மேற்கு உலக நாடுகள் ரஷ்யாவை போர்க்களத்தில் தோற்கடிக்க நினைப்பதாக குற்றம் சாட்டிய புதின், முடிந்தால் போர்க்களத்தில் ரஷ்யாவை வீழ்த்தி பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார். கடைசி உக்ரைன் குடிமகன் இருக்கும் வரை ரஷ்யாவுடன் சண்டையிட விரும்புவதாக உக்ரைன் அரசு கூறி வரும் அந்நாட்டு மக்களுக்கு சோகமான முடிவை ஏற்படுத்தும் என்றும் புதின் கூறியுள்ளார். பேச்சுவார்த்தையில் சுமூக முடிவை காண உக்ரைன் விரும்பவில்லை என்பதையே இந்த செயல் காட்டுவதாக ரஷ்யா அதிபர் புதின் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Russia ,President ,Putin ,US , Battlefield, Russia, America, Russia, President, Putin
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...