×

உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய்.. பாதிப்பு 77% உயர்வு : உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி!!

ஜெனீவா: உலகம் முழுவதும் 58 நாடுகளில் 6,000-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு மத்தியில் அயல் நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. ஆப்ரிக்க போன்ற நாடுகளில் காணப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. தற்போது வரை 59 நாடுகளில் 6000க்கும் மேற்பட்டோர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், உலகில் குரங்கு அம்மை வைரஸ் அ திகரித்து வருவதும், பரவலும் கவலை அளிக்கிறது. கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றை கண்டறியும் சோதனை சவால் நிறைந்ததாக உள்ளது.இதனால் அதிகம் பேருக்கு சோதனை நடத்தப்படுவதில் சிக்கல் இருக்கிறது. குரங்கு அம்மையால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 3 பேரும் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்.கடந்த 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. குரங்கு அம்மை தொற்றின் மையமாக ஐரோப்பா உள்ளது.85 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு, ஐரோப்பாவில பதிவாகி உள்ளது. என தெரிவித்தார்.

Tags : World Health Organization , World, Monkey Measles, Disease
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...