×

காசிமேட்டில் கப்பல் தீப்பிடித்ததால் பரபரப்பு

தண்டையார்பேட்டை: விசைப்படகுகள் தயாரிக்கும் இடத்தில் திடீரென சிறிய கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் அருகே  விசைப்படகுகள் தயாரிக்கும், பழுது பார்க்கும் இடம் உள்ளது. ராயபுரம் பகுதியை சார்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான சிறிய வகையிலான மீன்பிடி கப்பல் ஒன்று பழுது பார்ப்பதற்காக கரையோரம்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த கப்பலின் மேற்பரப்பில் இருந்து நேற்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி ராயபுரம், திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக வந்ததால் கப்பலின் அருகில் புதிதாக கட்டி வரும் ஐந்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் விபத்துகள் ஏற்படாமல் தப்பின.

இதுதொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கப்பலின் மேற்பரப்பில் உள்ள கேபின் தீப்பற்றி எரிந்துள்ளது. கேபின் அறையில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டது காரணமா அல்லது மர்ம நபர்களின் சதியா என பல்ேவறு கோணத்தில் விசாரணை நடக்கிறது.

Tags : Cassimate , Kasimedu, ship, fire
× RELATED சென்னை காசிமேட்டில் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் 9 பேர் மீட்பு!!