11ல் நாடாளுமன்ற குழுக் கூட்டம் அக்னிபாத் திட்டம் பற்றி ராஜ்நாத் சிங் விளக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் முப்படைகளுக்கும் அக்னிபாத் திட்டத்தின் கீழ், 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறைகளும் நடைபெற்ற போதிலும், இத்திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டம் வரும் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற உள்ள இதில், முப்படைத் தளபதிகள், பாதுகாப்புத் துறை செயலாளர்கள், மூத்த அதிகாரிகள், நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். இதில், அக்னிபாத் திட்டத்தின் உள்ள சாதகங்கள், வேலை வாய்ப்பில் இருக்கும் நன்மைகள், பணி சேர்ப்பு நடைமுறைகள் போன்றவை குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க உள்ளார்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: