அரசு, டாடா நிறுவன அதிகாரிகள் கைது

புதுடெல்லி: டாடா மற்றும் பல்வேறு நிறுவனத்துக்கு பல்வேறு ஒப்பந்தங்கள் பணிகள் வழங்குவதில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் பி.எஸ்.ஜா லஞ்சம் வாங்கியதாக சிபிஐக்கு புகார் சென்றது. இதையடுத்து, காஜியாபாத், நொய்டா, குருகிராம் உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ஜாவின் குருகிராம் வீட்டில் இருந்து ரூ.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து, சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் டாடா நிறுவத்துக்கு ஆதரவாக பல்வேறு பணிகளை ஜா செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, பி.எஸ்.ஜா மற்றும் டாடா திட்டங்களின் செயல் தலைவர் தேஷ்ராஜ் பதக், உதவி  துணை தலைவர் ஆர்.என்.சிங் உள்ளிட்ட 5 அதிகாரிகளை சிபிஐ கைது செய்துள்ளது. இதையடுத்து, 5 பேரும் பஞ்ச்குலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: