சந்திரபாபு நாயுடு விரலில் மைக்ரோ சிப் மோதிரம்: மூட நம்பிக்கையை நம்புவதாக பரபரப்பு

திருமலை: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு அணிந்திருந்தது ஜாதக மோதிரம் அல்ல என்றும், உடல்நிலையை கண்காணிக்கும் மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட ேமாதிரம் தான் என சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, மூட நம்பிக்கைகள் மற்றும் அதை சார்ந்தவைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவர் வெளியே எங்கு சென்றாலும் பேனா மட்டும் எடுத்து செல்வது வழக்கம்.  மோதிரங்கள் அல்லது கடிகாரங்கள் கூட அணியமாட்டார்.

இந்நிலையில், அன்னமய்யா மாவட்டம்  மதனப்பள்ளியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது இடது கையில் உள்ள ஆள்காட்டி விரலில் மோதிரம் அணிந்திருந்தார். இதனை  சில ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகத்தில் சந்திரபாபு நாயுடு  அடுத்த முறை எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என ஜாதகம் பார்த்து ராசி மோதிரம் அணிந்திருப்பதாக செய்திகள் பரவியது. இதனால், மதனப்பள்ளி (மினி மகாநாடு) கூட்டத்தில் வந்தவர்கள் சந்திரபாபு அணிந்திருந்த மோதிரம் குறித்தே  விவாதிக்க தொடங்கினர்.

இது குறித்த தகவலை சந்திரபாபு நாயுடுவின் கவனத்துக்கு கட்சி நிர்வாகிகள் கொண்டு சென்ற நிலையில், அந்த மோதிரத்தின் ரகசியத்தை தெரிவித்தார். ‘உண்மையில் அது மோதிரம் அல்ல. எனது உடல் நிலையை  கண்காணிக்கும் அனைவரும் அணியக்கூடிய பிட்னஸ்   மானிட்டர்.  இதன் மூலம்  உடல் வெப்பநிலை, சர்க்கரை அளவு, ரத்த கொதிப்பு, எவ்வளவு நேரம் தூங்கினேன், இருதய துடிப்பு  என்பதை கண்காணிக்கும் விதமாக மைக்ரோ சிப் பொருத்தப்பட்ட மோதிரம்.

இதன் மூலம், எனது உடல் நிலை குறித்து அவ்வப்போது கம்ப்யூட்டருக்கு செல்லும்.  அதனை வைத்து மறுநாள் காலையில்   உடல்நிலை பராமரிப்பில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்ப அதனை மீண்டும் செய்யாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக மோதிரம்  போட்டுள்ளேன். சமூகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் தெலுங்கு தேச கட்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்,’ எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்தார்.

Related Stories: