×

இளையராஜா, பி.டி.உஷாவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜா, பி.டி.உஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில், ‘‘இசையால்  நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ இளையராஜா நாடாளுமன்ற  மாநிலங்களவையில் உறுப்பினராய் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்’’ என கூறியுள்ளார். இதேபோல, ‘‘மாநிலங்களவை  உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பி.டி.உஷாவுக்கு வாழ்த்துகள்.  நாடாளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு  உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக  நம்புகிறேன்’’ என கூறியுள்ளார்.

Tags : M. K. Stalin ,Ilayaraja ,P. D. Usha , Greetings from Ilayaraja, PT Usha, MU K Stalin
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...