×

சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம்: தோனிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: சென்னையில் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் என இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:எம்.எஸ்.தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் இணையற்ற சாதனைகள்,எளிய பின்னணியில் இருந்து வரும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளை தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சென்னையில் நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Tags : Chennai ,CM ,Dhoni , Happy Birthday, Chennai, Chief Minister Dhoni
× RELATED நோயாளி இதயத்தில் சிக்கிய மருத்துவ...