×

ஒன்றிய கவுன்சிலர் இடைத்தேர்தல் திமுகவினர் பைக் பிரசாரம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம் 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நாளை (9ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற உள்ளது‌. இதில், திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 7 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி கடந்த ஒரு வாரமாக வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. திமுக வேட்பாளராக போட்டியிடும் எஸ்.கே.சேகரை ஆதரித்து பள்ளிப்பட்டு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் பைக் பிரசாரம் நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கிஷோர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

இதில், திமுகவினர் 100க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பங்கேற்று வெளியகரம், சானாகுப்பம், ஐ.வி.பட்டை, சங்கீதக்குப்பம், வெங்கட்ராஜ் குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ரவீந்திரநாத், திருத்தணி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர்த்தி ரவி, ஒன்றிய நிர்வாகிகள் வெங்கட பெருமாள், முத்து ரெட்டி, கோபி, ஆஞ்சநேயன், செங்கையா, பேரூர் செயலாளர் ஜோதி குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் செந்தில்குமார், கபிலா சிரஞ்சீவி, சொப்னா முரளி, குணசேகர், விஜயலு, முனிரத்தினம், ராமதாஸ், ஹபிபுல்லா, மோகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Tags : Union , Union councilor by-election DMK bike campaign
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை