வெளிநாட்டில் முதலீடு செய்யும் மகேஷ் பாபு, பிரபாஸ்

ஐதராபாத்: வெளிநாட்டில் முதலீடு செய்வதில் மகேஷ்பாபு, பிரபாஸ் ஆர்வம் காட்டுகிறார்கள். மகேஷ் பாபு நடித்த சர்க்காரு வாரி பட்டா தெலுங்கு படம் நல்ல வசூலை ஈட்டியது. பிரபாஸ் கடைசியாக நடித்த ராதே ஷியாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனாலும் மகேஷ் பாபுவும் பிரபாசும் தெலுங்கு சினிமாவில் முன்னணி இடத்தில் உள்ளனர். ஒரு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளமாக பெறுகிறார் பிரபாஸ். மகேஷ்பாபு, ரூ.75 கோடி சம்பளமாக வாங்குகிறார். இந்திய நடிகர்கள் பெரும்பாலும் பல்வேறு தொழில்களில் பணத்தை முதலீடு செய்கின்றனர். அந்த வகையில் இந்தி நடிகர்கள் பலரும் வெளிநாடுகளிலும் முதலீடு செய்கிறார்கள். அந்த வரிசையில் அமெரிக்காவிலுள்ள அனில் சுங்கரா அண்ட் கோ என்ற நிறுவனத்துடன் மகேஷ் பாபு கைகோர்த்துள்ளார். அமெரிக்காவில் ரியல் எஸ்டேட் தொழிலில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில்தான் மகேஷ் பாபு பணத்தை முதலீடு செய்திருக்கிறார். அதேபோல் துபாயில் மருத்துவமனைகள் சிலவற்றில் பிரபாஸ் முதலீடு செய்திருக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் நடிகர்களும் இனி மகேஷ் பாபு, பிரபாஸ் போல், வெளிநாடுகளிலும் முதலீடு செய்வதற்கு யோசிக்கிறார்கள்.

Related Stories: