2 தமிழர்கள் படுகொலையால் ஆத்திரம் மியான்மர் எல்லையில் ராணுவ சாவடிக்கு தீ: மணிப்பூர் மக்கள் கலவரம்

இம்பால்: தமிழத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் மோகன், வியாபாரி அய்யனார் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரேயில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, மியான்மரின் டாமு பகுதியில் நடந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பிடித்துச் சென்றதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, இருவரும் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொடூரமான முறையில் இறந்து கிடந்தனர். இதில் மோகனுக்கு கடந்த மாதம் 9ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது. மியான்மரில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் காட்டுத் தீயாக பரவியது. இதனால், இரு நாடுகளின் எல்லையில் பதற்றம் நீடிப்பதால் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மணிப்பூரில் இருந்து மியான்மர் எல்லைக்கு சென்ற கும்பல் அங்குள்ள ராணுவ சோதனை சாவடிக்கு தீ வைத்தது. அப்போது, தமிழர்கள் உடல்களை ஒப்படைக்காத மியான்மர் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது.

Related Stories: